வைகாசி விசாகம், முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து அக்னிவடிவமாக தோன்றிய நாள் ஆகும். வைகாசி மாதத்தில், பௌர்ணமியன்று விசாக நக்ஷத்திரம் இணைந்து வரும் நாளை கொண்டாடும் இந்த திருநாள், முருகப்பெருமானின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும்.முருகனுக்குரிய விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்ததால், இந்த நாளை மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறோம்.பக்தர்கள் விரதமிருந்து, முருகனுக்கு உகந்த செம்பருத்தி, அரளி மலர்களால் அலங்கரித்து, கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது சிறப்பு.